சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கோரிகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:அடிப்படை வசதி கோரி, புத்தர் நகர் குடியிருப்பு பகுதி மக்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேட்டுப்பாளையம் -- அன்னுார் சாலையில் புத்தர் நகர் உள்ளது. இங்கு, 1996ம் ஆண்டு, வீடு இல்லாதவர்களுக்கு, அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கியது. பல்வேறு காரணங்களால், இப்பகுதியில் வீட்டுமனை பெற்றவர்கள், வீடு கட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு,
 அடிப்படை வசதி கோரிகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்:அடிப்படை வசதி கோரி, புத்தர் நகர் குடியிருப்பு பகுதி மக்கள், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேட்டுப்பாளையம் -- அன்னுார் சாலையில் புத்தர் நகர் உள்ளது. இங்கு, 1996ம் ஆண்டு, வீடு இல்லாதவர்களுக்கு, அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கியது. பல்வேறு காரணங்களால், இப்பகுதியில் வீட்டுமனை பெற்றவர்கள், வீடு கட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு, இப்பகுதியில் ஏராளமானவர்கள் வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதி காரமடை பேரூராட்சிக்கு உட்பட்டதாகும்.இந்த குடியிருப்பு பகுதிக்கு, காரமடை பேரூராட்சி நிர்வாகம் குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சாலை, சாக்கடை என எவ்வித அடிப்படை வசதிகளும், இதுவரை செய்து கொடுக்கவில்லை. குடியிருக்கும் பொதுமக்கள், பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் புத்தர் நகர் மக்கள், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். ஏராளமானோர் பங்கேற்று, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X