மதுக்கரை:கோவை அருகே ஹவாலா பணம் சிக்கிய சம்பவத்தில், இருவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம், 50. கடந்த 25-ம்தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, நவக்கரை அருகே காரில் சென்றபோது, ஐந்து பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்திச் சென்றது. க.க.சாவடி போலீசார் விசாரித்தனர்.மாதம்பட்டியில் கார் மீட்கப் பட்டது.
காரில், 90 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்துல் சலாம், டிரைவர் சம்சுதீன் இருவரிடம் விசாரித்தபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.இருவரும் நேற்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் கொடுத்தனர். தொடர்ந்து, 'தேவைப்படும்போது வர வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு, இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE