பவானி:ஈரோடு மாவட்டம், பவானியில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான துணிப்பைகள், தைக்கும் பணிகளில், ஆயிரக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை காலத்தில், அரசின் துணிப்பை தைப்பதால், பை ஒன்றுக்கு, 1 ரூபாய் வீதம் கிடைப்பதால், தையல் தொழிலாளர்களுக்கு தினமும், 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இதற்கு முன்பு இவர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில், முக கவசம் தைக்கும் பணியில் போதுமான வருமானம் ஈட்டி வந்தனர்.
இது குறித்து, பவானி தையல் தொழிலாளர்கள் கூறியதாவது:பவானி சுற்றுவட்டார பகுதிகளில், துணிப்பைகள் தைக்கும் பணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றுக்கு, தேவையான பொருட்களை வழங்கும் போது, துணிப்பைகளை பயன்படுத்தினால், தையல் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும், வேலைவாய்ப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE