அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி முடிவை வரவேற்கிறோம்: த.மா.கா., இளைஞரணி தலைவர் பேட்டி

Added : டிச 30, 2020
Share
Advertisement
கோவை:அரசியல் கட்சி துவங்குவதில்லை என்ற நடிகர் ரஜினியின் முடிவை வரவேற்பதாக த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார்.கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினி எடுத்த முடிவை வரவேற்கிறோம். ரஜினிக்கு அனைத்து கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். உடல் நலன் முக்கியம் என்பதால், தெளிவாக முடிவு எடுத்திருக்கிறார்.அரசியல்

கோவை:அரசியல் கட்சி துவங்குவதில்லை என்ற நடிகர் ரஜினியின் முடிவை வரவேற்பதாக த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினி எடுத்த முடிவை வரவேற்கிறோம். ரஜினிக்கு அனைத்து கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். உடல் நலன் முக்கியம் என்பதால், தெளிவாக முடிவு எடுத்திருக்கிறார்.அரசியல் கட்சி துவங்காவிட்டாலும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று கூறியிருப்பதால், எந்த மாதிரியான சேவை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதால், முதல்வர் பழனிசாமிக்கு, ரஜினிஆதரவு அளிக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற ரஜினி கை காட்ட வேண்டும்.லோக்சபா தேர்தலில் மக்கள் ஏமாந்து தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். த.மா.கா., கட்சி பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் கேட்போம். எத்தனை தொகுதி என்பதை எங்கள் கட்சி தலைவர் முடிவு செய்வார். இவ்வாறு, யுவராஜா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X