பொது செய்தி

தமிழ்நாடு

234 தொகுதிகளில் போட்டி: அர்ஜுன் சம்பத் பேட்டி

Added : டிச 30, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:''ரஜினியின் ஆதரவு பெற்று, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுவோம்,'' என, ஹிந்து மக்கள் கட்சி, மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.கோவை தெற்கு மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நகர ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், 'கருப்பர் கூட்டத்தை விரட்டும் கந்தர் கூட்டம்' என்ற தலைப்பில், கந்த சஷ்டி கவச பாராயணம், வேல் வழிபாடு நிகழ்ச்சி,

பொள்ளாச்சி:''ரஜினியின் ஆதரவு பெற்று, 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுவோம்,'' என, ஹிந்து மக்கள் கட்சி, மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

கோவை தெற்கு மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நகர ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், 'கருப்பர் கூட்டத்தை விரட்டும் கந்தர் கூட்டம்' என்ற தலைப்பில், கந்த சஷ்டி கவச பாராயணம், வேல் வழிபாடு நிகழ்ச்சி, பொள்ளாச்சியில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் ரஜினி, உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி துவங்குவதில் பின் வாங்கினாலும், நாங்கள், 'ஆன்மிக அரசியலை' மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்போம். ரஜினி ஆதரவு பெற்று, 234 தொகுதிகளிலும், வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுவோம்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.தென்னை, பனை மரங்களில் கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம், பள்ளி, கல்லுரிகளில் ஹிந்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட, 11 கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X