சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்; நான்கு தனிப்படையினர் விசாரணை

Added : டிச 30, 2020
Share
Advertisement
கம்பம் : ராயப்பன்பட்டி ஆசிரியர் சேகர் 50, வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.ராயப்பன்பட்டி அந்தோணியார் தெருவில் வசிப்பவர் சேகர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி, ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக உள்ளார். டிச. 27 நள்ளிரவில்

கம்பம் : ராயப்பன்பட்டி ஆசிரியர் சேகர் 50, வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

ராயப்பன்பட்டி அந்தோணியார் தெருவில் வசிப்பவர் சேகர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஆரோக்கியசெல்வி, ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக உள்ளார். டிச. 27 நள்ளிரவில் இவர்கள் குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது மர்மநபர்கள் பெட்ரோல்குண்டுகளை வீசினர்.

தனிப்படைகள்
இது தொடர்பாக உத்தமபாளையம் டி.எஸ்.பி.சின்னக்கண்ணு தலைமையில் ஒரு தனிப்படை, எஸ்.பி.,சிறப்பு பிரிவு எஸ்.ஐ.,மாயன் தலைமையில் ஒருதனிப்படை படை உள்ளிட்ட நான்கு தனிப்படைகள் சேகர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தின.சம்பவத்திற்கு காரணத்தை கண்டறிவதில் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். வீட்டின் ஜன்னலுக்கு கீழ்பக்கம் உள்ள மின்இணைப்பு மீட்டர் பெட்டியை நோக்கி குண்டு வீசியுள்ளனர்.

மின் இணைப்பில் பட்டு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்துள்ளது. ஆனால் சுவரில்பட்டு வெடித்துள்ளது. மின்மீட்டர் பெட்டியும் தகரத்தில் செய்யப்பட்டிருந்ததால் சேதம் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் அங்குள்ள கணகாணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X