தேனி : தேனி அல்லிநகரம் வடக்குத்தெரு பால்பாண்டி மகன் ராம்குமார் 19. கூலித்தொழிலாளியான இவர் நண்பர் மணிகண்டனுடன் 18, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் அல்லிநகரத்தில் இருந்து வீரப்ப அய்யனார் கோயிலுக்குச் சென்றார்.
புதிதாக அமைக்கப்படும் பைபாஸ் ரோட்டில் பெரியகுளம் சரவணக்குமார் 37, ஓட்டி வந்த டிப்பர் லாரி ,டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பலியானார். மணிகண்டன் தலையில் பலத்தகாயத்துடன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். லாரி டிரைவரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE