பெரியகுளம் : பெரியகுளத்தில் குற்றச்சம்பவங்களை கண்காணித்து தடுக்க 21 இடங்களில் பொருத்தப்பட்ட 64 கேமராக்களில் 50 பழுதடைந்துள்ளது.
பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் திருட்டு, குற்றச்சம்பவங்கள், ரேஸ் பைக்குகளில் அதிவேகமாக செல்வோரை கண்காணித்து அதில் ஈடுபடுவோரை கைது செய்யும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. தென்கரை பகுதிகளான மூன்றாந்தல், வடக்கு அக்ரஹாரம், கல்லுாரி விலக்கு உட்பட 13 இடங்களில் 40 கேமராக்களும், வடகரை பகுதிகளான அரண்மனைத்தெரு, ஆடுபாலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 8 இடங்களில் 24 கேமராக்களும் பொருத்தப்பட்டன.
இவற்றை கண்காணிக்கவடகரை போலீஸ்ஸ்டேஷனில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது. தற்போது இரு பகுதிகளிலும் 50 கேமராக்கள் பழுதடைந்துள்ளன. கட்டுப்பாட்டு அறையில் இயங்கிய கண்காணிப்பு திரையும் நிறுத்தப்பட்டது. இதனால் சட்ட விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர டி.எஸ்.பி., முத்துக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE