கன்னிவாடி : துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பாட புத்தக வழங்கலில் குளறுபடி மூலம் கணித, அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
தொற்று பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய கல்வியாண்டு சேர்க்கை, இலவச புத்தகம், சீருடை போன்றவற்றுக்கு அரசு அனுமதித்துள்ளது.புதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிற வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க அரசு அறிவுறுத்தியது. அரசு பள்ளிகளில் இவற்றை செயல்படுத்துவதில் குளறுபடி புகார் எழுந்துள்ளது. பல துவக்க, உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி சேர்க்கையை ஆசிரியர்கள் தவிர்த்துள்ளனர்.
சில பள்ளிகளில் முதல் பருவத்திற்கான புத்தகத்தில் தமிழ், ஆங்கில பாட ஒருங்கிணைந்த முதல் தொகுதி மட்டுமே கிடைத்தது.
கன்னிவாடி ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி சந்துரு கூறுகையில், ''ஆங்கில வழி மாணவர்களுக்கும் இதே பிரச்னை உள்ளது. இரண்டாம் பருவ புத்தகங்களிலும், கணிதம், அறிவியல், சமூக அறிவியலை பாடங்களை இருட்டடிப்பு செய்துள்ளனர். அதிகாரிகள் முறையான ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE