வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே தகாத உறவு வைத்தவரிடம் பணம் கேட்டு தொல்லை செய்த பெண் கொலை செய்யப்பட்டார்.
ராஜதானி கோட்டையை சேர்ந்தவர் ரேகா 43. இவரது கணவர் லோகநாதன். பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவருக்கும் சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் தகாத உறவு இருந்தது. இதனால் முருகனிடம் ரேகா அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்து வந்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த முருகன் ரேகாவை தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.வீட்டை விட்டு சென்ற ரேகா 2 நாட்களாக திரும்பாததால் கிராமத்தினர் தேடினர். கிராமத்திற்கு அருகே உள்ள கரட்டுப் பகுதியில் தலையில் காயங்களுடன் ரேகா பிணமாக கிடந்தார். விருவீடு போலீசார் விசாரித்து முருகனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE