பொது செய்தி

தமிழ்நாடு

மயிலாப்பூரில் உலர் களம் அமைக்கப்படுமா

Added : டிச 30, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல் அணைப்பட்டி, மயிலாப்பூரில் வேளாண் விளை பொருட்களை உலர வைக்க களம் அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திண்டுக்கல் பாலராஜாக்காபட்டி, அணைப்பட்டி, மயிலாப்பூர், ரெட்டியார்சத்திரம் பகுதியில் நெல், மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை உலர வைக்க அரசு சார்பில் உலர் களம் இல்லை. மயிலாப்பூரில் இருக்கும்

திண்டுக்கல் : 'திண்டுக்கல் அணைப்பட்டி, மயிலாப்பூரில் வேளாண் விளை பொருட்களை உலர வைக்க களம் அமைக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் பாலராஜாக்காபட்டி, அணைப்பட்டி, மயிலாப்பூர், ரெட்டியார்சத்திரம் பகுதியில் நெல், மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை உலர வைக்க அரசு சார்பில் உலர் களம் இல்லை. மயிலாப்பூரில் இருக்கும் பொது உலர் களம் புதர் மண்டி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தானியங்களை வீட்டு முற்றம், விவசாய நிலம், ரோட்டில் கொட்டி உலர வைக்கின்றனர்.

மழைக்காலத்தில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இப்பகுதியில் அரசு சார்பில் உலர் களங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.விவசாயி கிறிஸ்டோபர் கூறுகையில், 'நெல், மக்காச்சோளம் போன்ற தானிய பயிர்களை இருப்பு வைத்து விற்பதற்கு உலர்த்த வேண்டியது அவசியம். உலர் களம் இல்லாததால் ரோட்டில் கொட்டி உலர வைப்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X