திண்டுக்கல் : 'முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: முதுகு தண்டுவடம் பாதித்த ஸ்கூட்டரை இயக்க கைகளில் வலு உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். ஏற்னவே ஸ்கூட்டர் பெற்றவர்கள் அதில் ஏதேனும் வடிவமைப்பு தேவைப்பட்டாலும் விண்ணப்பிக்கலாம். தேசிய அடையாள அட்டை, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் (1) நாளைக்குள் (டிச.31) மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0451-2460099 ல் பேசலாம் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE