அணையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அணையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

Added : டிச 30, 2020
Share
வேடசந்துார் : அழகாபுரி அணையில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், தண்ணீரை நிரப்ப வலியுறுத்தியும் விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.வேடசந்துார் அருகே அழகாபுரி குடகனாற்றில் கட்டப்பட்டகுடகனாறு அணையின் இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் 9ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஐந்து ஆண்டுகளாக நீர் வரத்துஇன்றி அணை வறண்டது. தற்போது 12 அடி தண்ணீர்

வேடசந்துார் : அழகாபுரி அணையில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், தண்ணீரை நிரப்ப வலியுறுத்தியும் விவசாயிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.

வேடசந்துார் அருகே அழகாபுரி குடகனாற்றில் கட்டப்பட்டகுடகனாறு அணையின் இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் 9ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஐந்து ஆண்டுகளாக நீர் வரத்துஇன்றி அணை வறண்டது. தற்போது 12 அடி தண்ணீர் வந்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர், அணைப் பகுதியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை, முட்புதர்களை அகற்ற வேண்டும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதைதடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் அணித் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.போராட்ட குழு தலைவர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். சீல்நாயக்கர், திருப்பதி, பொம்முலு கவுண்டர்,ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X