அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கூட்டணிக்கு 'வேட்டு' வைக்காதீர்!

Updated : டிச 31, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக, பா.ஜ., தலைவர்கள், தடாலடியான பேச்சில் ஈடுபடுகின்றனர். இது, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கும், ஆரோக்கிய அரசியலுக்கும் உகந்ததல்ல.தமிழக, பா.ஜ., தலைவர்களாக இருந்த இல.கணேசன், தமிழிசை உள்ளிட்டோரின் பேச்சு மற்றும்
BJP, ADMK, alliance


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக, பா.ஜ., தலைவர்கள், தடாலடியான பேச்சில் ஈடுபடுகின்றனர். இது, பா.ஜ.,வின் வளர்ச்சிக்கும், ஆரோக்கிய அரசியலுக்கும் உகந்ததல்ல.

தமிழக, பா.ஜ., தலைவர்களாக இருந்த இல.கணேசன், தமிழிசை உள்ளிட்டோரின் பேச்சு மற்றும் செயல்பாடு, ஆரோக்கியமானதாக இருந்தன. ஆனால், இன்றையத் தலைவர்கள், 'எடுத்தேன்; கவிழ்த்தேன்' என்று பேச ஆரம்பித்து விட்டனர்.தமிழகத்தில், 'தாமரை' மலர வேண்டும் என்றால், அதற்கான ஆயத்தப் பணிகளை, மக்களிடம் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதை விடுத்து, திராவிடப் பேச்சாளர் போல, அநாகரிகமாக பேசக் கூடாது; இதை, மக்களும் ரசிக்க மாட்டார்கள்.

மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின் தான், தமிழகம் எனும் குளத்தில், தாமரை இலை ஓரளவு தெரிய துவங்கி இருக்கறது. அது, இனிமேல் தான் மொட்டு விட்டு, மலர வேண்டும்.அதற்குள், தமிழகமே தாமரைக் காடாய் மாறிக் கிடப்பது போன்ற மமதையில், பா.ஜ.,வினர் ஆட்டம் போடக் கூடாது, இதை, பா.ஜ., மூத்தத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.


latest tamil newsதமிழகத்தில், அ.தி.மு.க., உடன் நாகரிகமான கூட்டணி அமைத்து, கொடுக்கும் தொகுதியைப் பெற்று, சட்டசபைக்குள், பா.ஜ., நுழைய முயற்சிக்க வேண்டும்.அதை விடுத்து, 'முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., தலைமை தான் முடிவு செய்யும். கொள்ளையடித்த பணத்தை தான், கொடுக்கின்றனர்' எனக் கூறி, கூட்டணிக்கு, 'வேட்டு' வைக்கக் கூடாது.

'இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்டானாம்' என்ற சொலவடை போல, தமிழக பா.ஜ., தலைவர், எல்.முருகன் உள்ளிட்ட, அக்கட்சி நிர்வாகிகள் செயல்படக் கூடாது.படிப்படியாக ஏறித் தான், உச்சத்துக்கு போக முடியும். 'சொய்ய்ங்ங்'ன்னு உச்சில போய் உட்கார, அரசியல் ஒன்றும், 'ஜீபூம்பா' விளையாட்டு கிடையாது.தமிழகத்தைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க.,வை பகைத்துக் கொள்வது, பா.ஜ., வுக்கு நல்லதல்ல.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
30-டிச-202020:33:57 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் பாவம் என்ன பண்ணுவது NOTTA வுடன் தான் வாழ்க்கை என்று BJP தலையில் எழுத்து இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும் , பாவம் அழுது புரண்டாலும் விழும் 1500 வோட்டு தான் தொகுதிக்கு தேறும் பாவம...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
30-டிச-202019:42:53 IST Report Abuse
S. Narayanan Now public want have a change everywhere. Because Rajini has not come BJP will dominate AIADMK and keep control over power.
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
30-டிச-202019:20:46 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு வரவில்லை ஒத்த வார்த்தை ஒரு கட்சியின் சப்த நாடியும் அடங்கி மடங்கி விட்டது இனி காப்பாற்றுவார் யாரோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X