மதுரை : மதுரை மீனாம்பாள்புரம் ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனங்கொட்டையில் பொம்மைகள் தயாரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.நிறுவனர் அபுபக்கர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் அசோக்குமார் பயிற்சியளித்தார். வழக்கறிஞர் ஜமாலுதீன், சமூக ஆர்வலர்கள் தனராஜ், செந்தில்குமார், ராஜேஷ்கண்ணன், சங்கரபாண்டி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக செல்லுார் கண்மாயில் வளர்ந்திருந்த பனை கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டு பனையின் முக்கியத்துவம் பங்கேற்றோருக்கு விளக்கப்பட்டது. வழிகாட்டி நிறுவனர் மணிகண்டன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE