மதுரை : மலேசியா வேலைக்கு சென்று மாயமான மதுரை வாலிபர் இறந்ததாக வந்த தகவலால் அவரை மீட்டு கொண்டு வரும்படி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தினர் கண்ணீர் வடித்தனர்.
காமராஜர்புரம் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் சப்பாணி 56. இவரது மகன் பூமிநாதன் மலேசியாவிற்கு 2019 செப்., 2 வேலைக்கு சென்றார். அவர் இறந்ததாக வாட்ஸ்ஆப்பில் படம் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சப்பாணி கூறுகையில், ''மகன் பூமிநாதனுக்கு மனைவி சாந்தி, மகள் கனிகாஸ்ரீ, மகன் யோகேஸ்பாலா உள்ளனர். மலேசியாவில் ராதிகா என்ற பெண்ணிடம் கேட்டரிங் வேலை செய்வதாக தெரிவித்தார். பின் ரோகன் என்பவரிடம் வேலை செய்வதாக தெரிவித்தார். மூன்று மாதங்களாக தொடர்பு கொள்ளவில்லை. மலேசியாவிலுள்ள கார்த்திக், ''என்மகனை கோபால் என்பவர் அடைத்து சித்ரவதை செய்வதாக'' தெரிவித்தார். இந்நிலையில் அவர் இறந்தது போல படம் வாட்ஸ் ஆப்பில் பரவுகிறது. மத்திய, மாநில அரசுகள் என் மகனை மீட்டு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE