நாமக்கல் : ''ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கான டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
நாமக்கல்லில் நேற்று இரவு, அ.தி.மு.க., பிரசார கூட்டம் நடந்தது. முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க., கார்ப்பரேட் கம்பெனி. அதன் தலைவர் ஸ்டாலின்; அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் பதவிக்கு வருவர். தி.மு.க., மக்களை ஏமாற்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும்; தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து வந்துவிடும். கடை போட்டால் மாமூல் வாங்க துவங்கி விடுவர்.
இன்று அ.தி.மு.க., ஆட்சியில் அந்த நிலை இல்லை; சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கான விருதை நமது அரசு பெற்றுள்ளது. கடந்த, 2011க்கு முன், தி.மு.க., என்ன செய்தது என எண்ணி பாருங்கள். ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது. இதை சொன்னால் ஸ்டாலினால் ஏற்க முடியவில்லை. உதயநிதியை தொடர்ந்து பேரனும் அடுத்து வந்து விடுவார்.

கொரோனோ காலத்தில் தினசரி, 7 லட்சம் பேருக்கு உணவளித்தோம் . விலையில்லா அரிசி, எண்ணெய் , பருப்பு, ரேஷன் கார்டுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தோம். அது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். பொய் பேசுவதற்கான டாக்டர் பட்டம் ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். வரும் தேர்தலில், அ.தி.மு.க.,.விற்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE