குண்டர் சட்டத்தில் 80 பேர் கைது
மதுரை: புதுார் காந்திபுரம் செவத்தபாண்டி 23. இவர் மீது கொலை உள்ளிட்டவழக்குகள் உள்ளன.இவரை கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். இந்தாண்டில் 80 பேர் இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலஅபகரிப்பு வழக்கு
மதுரை: பி அண்ட் டி நகர் நட்சத்திரா நகர் சீனிவாஸ் 57. இவரது இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றதாக திருப்புவனம் பாண்டியம்மாள் உட்பட 4 பேர் மீது நிலஅபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பஸ் ஊழியர்கள் மீது வழக்கு
மதுரை: எல்லீஸ்நகர் அரசு பஸ் டெப்போவில் ரூ.15.20 லட்சம் மாயமானது. இதுதொடர்பாக ஊழியர்கள் பாண்டியராஜன், செல்வம், சென்றாயன் ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கட்டி போட்டு நகை, பணம் கொள்ளை
மதுரை: அவுட்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா 66. வீட்டினுள் இரவு 3:00 மணிக்கு முகத்தை துணியால் மூடிக்கொண்டு 4 பேர் வந்தனர். சேலையால் சரோஜா, தாயார் கமலத்தை கட்டிப்போட்டு 27 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பணம் இரட்டிப்பு மோசடி
மதுரை: நெல்லை கல்லிடைக்குறிச்சி புத்தாட்டன் 50. இவரிடம் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதி ஓட்டலில் தங்கியிருந்த சிவகிரி பால்துரை 39, பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.5லட்சம் கேட்டார். இதுகுறித்து போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பால்துரையை மதிச்சியம் போலீசார் கைது செய்து ரூ.12.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவுடன் கைது
மதுரை: மேலகுயில்குடி அருண்பாண்டி 20. முத்துப்பட்டி கண்மாய் கரையில் 4 கிலோ கஞ்சாவுடன் சுப்பிரமணிய புரம் போலீசார் கைது செய்தனர்.
மிரட்டியவர் கைது
கொட்டாம்பட்டி: மேலுார் மில்கேட் சரவணன் 51. பொதுப்பணித்துறை பொறியாளர். நேற்று லெக்கடிபட்டி மந்தைகுளத்திற்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்த போது, அதே ஊரை சேர்ந்த வெள்ளக்காளை 70, பணியை செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக சரவணன் புகார் செய்தார். எஸ்.ஐ., பழனியப்பன் கைது செய்தார்.
உண்டியல் திருட்டு
மேலுார்: பூசாரிபட்டி அருகே உள்ள ராமராஜபுரம் முனியாண்டி கோயில் உண்டியலை நேற்று திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE