காரைக்கால் : காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு பழங்கால பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட'கருப்பு கவுனி' நெல் சாகுபடிக் குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
காரைக்கால் அரசு வேளாண் கல்லுாரியில் இளங்கலை வேளாண் மாணவர்களுக்கு போராசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் மருத்துவ குணம் கொண்ட 'கருப்பு கவுனி' நெல் சாகுபடி குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.பயிற்சி வகுப்பில், காரைக்கால் தலத்தெரு கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயி இளங்கோ, 'கருப்பு கவுனி' நெல் சாகுபடி முறை, அதற்கு பயன்படுத்தும் இயற்கை உரங்கள், 'கருப்பு கவுனி'நெல்லின் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கினார்.இப்பயிற்சி வகுப்பில் கல்லுாரி மாணவர்கள் சிவமங்களா, விஷ்ணு பிரியா, சஞ்ஜய் காந்த் உள்ளிட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண் டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE