புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வார்டன்கள் சோதனையில் மொபைல்போன் சிக்கியது.
காரைக்காலை சேர்ந்த குண்டர் சட்ட ரவுடி பாலமுருகன்,23; அடிதடி வழக்கில் கைதான காரைக்காலைச் சேர்ந்த கலியமூர்த்தி, 46; மற்றும் தன்வந்திரி போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி பிரதிப், 25; ஆகியோர் காலாப்பட்டு சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் மதியம் பாலமுருகன், பிரதிப் இணைந்து, கலியமூர்த்தியை ஆபாசமாக திட்டி, நடனமாட கூறினர். மறுத்த கலியமூர்த்தியை, பாலமுருகன், பிரதிப் இருவரும் சேர்ந்து தாக்கினர்.
சத்தம் கேட்டு ஓடி வந்த சிறை வார்டன்கள், கலியமூர்த்தியை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின்னர், பாலமுருகன் அறையை சோதனை செய்தபோது, அவரது போர்வையின் கீழ் ஒரு மொபைல்போன், சார்ஜர், சிம் கார்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.கைதிகள் இடையே மோதல் மற்றும் மொபைல்போன் பறிமுதல் தொடர்பாக, சிறை கண்காணிப்பாளர் கோபிநாத், அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE