புதுச்சேரி : புதுச்சேரி - கடலுார் மறை மாநிலத்துக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை பேராயராக நியமிக்க கோரி பேரணி நடந்தது.
தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று கோரிக்கை பேரணி நடந்தது. இயக்க தலைவர் மேரி ஜான் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ஆரோக்கியதாஸ், பொருளாளர் சந்தானதுரை, துணைத் தலைவர் ஆரோக்கியசாமி, இளைஞரணி செயலர் சூசை முன்னிலை வகித்தனர்.கம்பன் கலை அரங்கம் அருகில் இருந்து துவங்கிய பேரணி அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக பேராயர் இல்லத்தை நோக்கி சென்றது. வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இயக்கத்தின் பொதுச் செயலர் டேனியல், இணை பொதுச் செயலர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.தொடர்ந்து, இயக்க நிர்வாகிகள், பேராயர் அந்தோணி ஆனந்தராயரை சந்தித்து மனு அளித்தனர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறும்போது, 'புதுச்சேரி - கடலுார் உயர்மறை மாவட்டத்தில் கடந்த 388 ஆண்டுகளில் ஒருமுறைகூட தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் பேராயராக நியமிக்கப்படவில்லை. தற்போது காலியாக உள்ள பேராயர் பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்க வேண்டும்.புதுச்சேரி - கடலுாரில் தலித் கிறிஸ்தவர்கள் 75 சதவீதம் உள்ளதால், ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியிடங்கள், குரு மடங்களில் 3:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது.கோரிக்கைகள் அடங்கிய மனு பேராயரிடம் வழங்கப்பட்டுள்ளது. நல்ல முடிவை எடுப்பதாக பேராயர் உறுதியளித்துள்ளார்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE