மதுராந்தகம், : மதுராந்தகம் சாலையில், செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் சாலை, தென் மாவட்டங்க ளுக்கான முக்கிய இணைப்பாக உள்ளது. இதனால், இந்த சாலையில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.பஸ்கள், லாரிகள், கார், வேன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படும், இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள், சரிவர செயல்படவில்லை. இதை சீரமைக்க, அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, பல தரப்பினரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது குறித்து, மதுராந்தகம் வாகன ஓட்டிகள் கூறியதாவது:மதுராந்தகம் அடுத்த, கருங்குழியில் அமைத்துள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் படாளம் கூட்டுச்சாலையில் உள்ள சிக்னல்கள் இயங்கவில்லை.மேலும், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, நெடுஞ்சாலை மற்றும் மதுராந்தகம் பை - பாஸ் சாலையில், பஸ்சில் இருந்து இறங்குவோர், ஏறுவோர் ஆபத்தாக சாலையை கடக்கின்றனர்.இந்த இடங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் குறுக்கே புகுந்து, சாலையை கடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக, எச்சரிக்கை பலகைகளாவது வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE