சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்களை சுற்றி அழகுக்காக அமைக்கப்பட்டது அலங்கோலம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் : கோவில்களைச் சுற்றி அழகுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை, அலங்கோலமாக இருப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு, வெளி மாநிலத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.அவர்களை கவரும் வகையில், மத்திய அரசு சார்பில், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில், பல பணிகள்

காஞ்சிபுரம் : கோவில்களைச் சுற்றி அழகுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை, அலங்கோலமாக இருப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.

காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு, வெளி மாநிலத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.அவர்களை கவரும் வகையில், மத்திய அரசு சார்பில், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில், பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில், இந்த கோவில்களின் சன்னிதி தெருவை சுற்றிலும், மாட வீதியில், அழகுக்காக கருங்கற்கள் பதிக்கப்பட்ட தரை, தடுப்பு கல் துாண்கள், துருப்பிடிக்காத இரும்பு கம்பி ஆகியவை பொருத்தப்பட்டன.

தற்போது, அவை சேதமடைந்து, அலங்கோலமாக இருப்பதாக, பக்தர்கள் கூறுகின்றனர்.இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:பணி முடிந்ததும், பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஆனால், ஓராண்டிற்குள், கருங்கல் தடுப்புகள் விழுந்தன. இரும்பு கம்பிகள் காணவில்லை. குறிப்பாக, ஏகாம்பரநாதர் கோவில் கிழக்கு மாடவீதியில் அமைக்கப்பட்ட தடுப்பு கற்களில், அங்குள்ள சிலர், கால்நடைகளை கட்டி வைக்கின்றனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட திட்டம், அலங்கோலமாக காணப்படுகிறது. உடைந்து கிடக்கும் தடுப்பு கருங்கற்கள், இன்னும் சில நாட்களில் காணாமல் போகும். நகராட்சி அதிகாரிகள், இவற்றை கண்காணித்து, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X