ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள மாணவர்கள், வேலைக்கு செல்வோர், ஒரகடம், படப்பை, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.இவர்களின் வசதிக்காக, தாம்பரத்திலிருந்து படப்பை, ஒரகடம், பண்ருட்டி வழியாக மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு, தடம் எண்: 55 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால், தாம்பரம் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக நிறுத்தப்பட்ட அரசு பஸ், மீண்டும் இயக்கப்படவில்லை.
இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE