பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : டிச 30, 2020
Share
Advertisement
ஓட்டுச்சாவடிகளில் ஆய்வுவாலாஜாபாத்: தமிழகத்தில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி குறு வட்டத்தில் இருக்கும், பல ஓட்டுச்சாவடிகளில்,

ஓட்டுச்சாவடிகளில் ஆய்வுவாலாஜாபாத்: தமிழகத்தில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி குறு வட்டத்தில் இருக்கும், பல ஓட்டுச்சாவடிகளில், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரகடத்தில் மரக்கன்றுகள் நடவு ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம், 'சிப்காட்' பகுதியில், 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடு அமைக்கும் பணி, நேற்று துவங்கியது. சென்னை ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு, குறுங்காடு அமைக்கும் பணிகளை துவங்கி வைத்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பலர் பங்கேற்றனர்.

மாத்துாரில் 'அம்மா' கிளினிக் திறப்பு ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், தமிழக அரசின், 'அம்மா' மினி கிளினிக் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பழனி பங்கேற்று, துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஷியாம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவிலில் பவுர்ணமி விழா திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் கிரிவலப்பாதையில், வேதகிரீஸ்வரர் கோவிலின் துணைக்கோவில்களில் ஒன்றான, திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது.மார்கழி மாத பவுர்ணமியை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு நேற்று, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால் மகா அபிஷேகம், தீப துாப ஆராதனை நடந்தது. கவச அலங்காரத்தில், அருள்பாலித்த சொக்கம்மன்னை, பக்தர்கள் தரிசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X