காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை கழிவு நீர் கால்வாயில் கிடக்கும் பழங்கால கல் துாண்கள், 7ம் நுாற்றாண்டை சேர்ந்தவை எனவும், தொல்லியல் ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை மின் வாரியம் அலுவலகம் பின்புறம், கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு கரை அமைக்கவும், அருகில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு செல்லவும், கால்வாய் மீது சிறுபாலம் அமைக்க, பழங்கால கல் துாண்களை பயன்படுத்திஉள்ளனர்.இந்த கல் துாண்கள், சிற்ப வேலைபாடுகளுடன் இருந்தன. இதனால், ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் உள்ள, இரட்டை திருமாளிகை சீரமைப்பின்போது, இந்த கல் துாண்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என, பக்தர்கள் கூறினர்.
இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம், படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், அறநிலையத் துறை கட்டுமான பணி உதவி பொறியாளர் குமரகுருபரன் ஆகியோர், நேற்று, கால்வாய்க்கு சென்று ஆய்வு செய்தனர்.இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவதுஇந்த கல் துாண்கள், ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மணல்கல் வகையை சேர்ந்தவை.
இந்த இடம் அருகில், பழங்கால மண்டபம் இருந்திருக்கலாம். இடிந்த மண்டபத்தில் இருந்து, கல் துாண்களை அகற்றி, கால்வாயில் போட்டிருக்கலாம்.இது போன்ற பழங்கால பொருட்கள் கிடைத்தால், அருங்காட்சியகத்தில் வைப்பது வழக்கம். தொல்லியல் துறை ஆய்வுக்கு பின், முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE