மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், சுற்றுலா துறை பகுதி, ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், கடை இடத்தை, சட்டவிரோதமாக விற்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், கடற்கரைக் கோவில் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக, விடுதி வளாகம் உள்ளது.இந்த வளாகப் பகுதியை, வியாபாரிகள் ஆக்கிரமித்து, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட கடைகள் நடத்துகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன், தற்காலிக கடைகளாக உருவாகி, தற்போது,கட்டடங்களாக உருவாகி உள்ளன. இந்தக் கடைகளால், தொல்லியல் நிர்வகிக்கும் கலைச்சின்ன பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் எனவும், தொல்லியல் துறை, தொடர்ந்து வலியுறுத்துகிறது .கடற்கரைக்கு செல்லும் குறுகிய பாதையையும், கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், அவ்வழியே செல்லும் பயணியர் நெரிசலில் சிக்குகின்றனர்.
இதன் காரணமாக, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, சில ஆண்டுகள் முன், வருவாய் துறை, 126 ஆக்கிரமிப்பாளர்களுக்கு, அறிவிப்பாணை வழங்கியது.ஆனால் அவர்கள், கடைகளை அகற்றாமல், அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடத்துகின்றனர். இந்நிலையில், கடைகளை வைத்துள்ளோர், 10 - 15 லட்சம் ரூபாய்க்கு, கடையை விற்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு துறை இடம் என்பதை அறியாமல், பிறரும் வாங்குகின்றனர்.எனவே, கடைகளுக்கு மாற்று இடம் வழங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இட விற்பனையை தடுக்க, எச்சரிக்கை பலகை அமைக்கவும், சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE