பொது செய்தி

தமிழ்நாடு

செல்ல பூனைக்கு வளைகாப்பு திருவேற்காடில் நெகிழ்ச்சி

Added : டிச 30, 2020
Share
Advertisement
சென்னை : தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பூனைக்கு, அதன் உரிமையாளர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சென்னை, திருவேற்காடு, சாமி நடேசனார் நகரைச் சேர்ந்த தம்பதி ஜோதிகுமார் - சிவகாமி. ஜோதிகுமார், ரியல் எஸ்டேட் தொழிலுடன், வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு, ஐஸ் வினியோகம்

சென்னை : தங்களது வீட்டில் வளர்க்கும் செல்லப்பூனைக்கு, அதன் உரிமையாளர்கள், உறவினர்களுடன் சேர்ந்து, வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை, திருவேற்காடு, சாமி நடேசனார் நகரைச் சேர்ந்த தம்பதி ஜோதிகுமார் - சிவகாமி. ஜோதிகுமார், ரியல் எஸ்டேட் தொழிலுடன், வானகரம் மீன் மார்க்கெட்டிற்கு, ஐஸ் வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.அவரது வீட்டில் வளரும், 'ரியா' என்ற பூனை கருவுற்றது தெரிய வந்தது. இதையறிந்து மகிழ்ந்த அக்குடும்பத்தினர், குடும்பத்தில் ஒருவராக பழகி வளரும் ரியாவுக்கு, வளைகாப்பு நடத்தி, மகிழ விரும்பினர்.நேற்று முன்தினம் இரவு, தங்களது நெருங்கிய உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களுடன், பூனைக்கு வளைகாப்பு விழா நடத்தினர்.

அதற்காக, சிவகாமியும், அவரது மகளும் சேர்ந்து, செல்லப் பூனையை அலங்கரித்தனர்.மேலும், அதற்கு பிடித்தமான மீன், இறால், சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை, சாப்பிட வைத்தனர். வளைகாப்பு விழாவில், உரிமையாளர்களுடன், உறவினர்களும், பூனைக்கு நெற்றியில் குங்குமம் இட்டு மகிழ்ந்தனர்.இந்த நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த பலரும், இந்நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது குறித்து, ஜோதிகுமார், 44, கூறியதாவது: எங்கள் வீட்டில், ஏற்கனவே, இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்கிறோம்.

மார்ச் மாதம் ஊரடங்கின் போது, வானகரம் மீன் மார்க்கெட் அருகே, குட்டியாக, இந்த பூனை சுற்றி வந்தது.பிடித்து போனதால், நான் வீட்டிற்கு எடுத்து வந்தேன். அன்று முதல், எங்களின் செல்லக்குழந்தையாகி விட்டது.நாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு, ஆண்டுதோறும் பிறந்த நாள் கொண்டாடுவோம். அது போன்று, இந்த பூனைக்கும், வளைகாப்பு செய்து மகிழ்ந்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.போஸ்டர்//

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X