விளைப்பொருட்களில், இனிப்பு பலகாரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கேட் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண் விவசாயி எம்.நிர்மலாதேவி கூறியதாவது:வேர்க்கடலை, எள் மற்றும் பனை வெல்லம் ஆகிய விளைப்பொருட்களை பயன்படுத்தி, இனிப்பு வகை பலகாரங்கள் தயாரிக்கலாம்.
இதற்கு, நாம் நிலம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.விவசாயிகளிடம் இருந்து, விளைப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, அதை மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து விற்கலாம்.கருப்பட்டி எனும் பனை வெல்லம் பயன்படுத்தி, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை செய்து, சந்தையில் விற்பனை செய்து, கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன். இயற்கை விளைப்பொருட்களில் செய்த பலகாரம் என்பதால், மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.நான் தயாரிக்கும் எள், வேர்க்கடலை உருண்டைகளை பெற, இணையதள முகவரி மற்றும் மொபைலில் தொடர்பு கொள்கின்றனர்.இந்த இனிப்பு பலகாரத்தை, அனைத்து வித நோயாளிகளும் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்தொடர்புக்கு: 86670 42235
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE