கரடு முரடாகிய கோளூர் சாலை

Added : டிச 30, 2020 | |
Advertisement
பொன்னேரி : கோளூர்- - புதுச்சேரி மேடு இடையேயான சாலை, சரளைக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும், கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில் இருந்து, புதுச்சேரிமேடு வழியாக, அண்ணாமலைச் சேரி செல்லும் சாலை, 2016ம் ஆண்டு, 37 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது.சாலை அமைத்த சில மாதங்களில், சரளைக் கற்கள்

பொன்னேரி : கோளூர்- - புதுச்சேரி மேடு இடையேயான சாலை, சரளைக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும், கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில் இருந்து, புதுச்சேரிமேடு வழியாக, அண்ணாமலைச் சேரி செல்லும் சாலை, 2016ம் ஆண்டு, 37 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது.சாலை அமைத்த சில மாதங்களில், சரளைக் கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டன. சேதம் அடைந்த பகுதிகள், நான்கு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன.சேதம் அடைந்த பகுதி களை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இரவு நேர பயணத்தின்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் சிக்கி, தடுமாறி விழுந்து சிறு, சிறு விபத்துக்களை சந்திக்கின்றனர்.விவசாயப் பணிகளுக்கு செல்லும் டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் சாலை பள்ளங்களில் சிக்கி தவிக்கின்றன. விவசாயிகள், கிராமவாசிகள் பயணிக்கும் மேற்கண்ட, சாலையை சீரமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X