விபத்தில் வாலிபர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் வாலிபர்

Added : டிச 30, 2020
Share
பள்ளிக்கரணை : பள்ளிக்கரணையில், கட்டுப்பாட்டை இழந்து, மீடியன் மீது இருசக்கர வாகனம் மோதியதில், வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, பொழிச்சலுார், பாண்டுரங்கன் நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் வேந்தன், 24; பெருங்குடியில் உள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில், அசோசியேட் இன்ஜினியராக பணி புரிந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பெருங்குடியில் இருந்து பல்லாவரம்

பள்ளிக்கரணை : பள்ளிக்கரணையில், கட்டுப்பாட்டை இழந்து, மீடியன் மீது இருசக்கர வாகனம் மோதியதில், வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, பொழிச்சலுார், பாண்டுரங்கன் நகரைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் வேந்தன், 24; பெருங்குடியில் உள்ள, தனியார் நிறுவனம் ஒன்றில், அசோசியேட் இன்ஜினியராக பணி புரிந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பெருங்குடியில் இருந்து பல்லாவரம் நோக்கி, ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, பள்ளிக்கரணை, கைவேலி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 'ஹெல்மெட்' அணியாமல் பயணித்த அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர்.விபத்து குறித்து, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X