பொது செய்தி

தமிழ்நாடு

நெற்களமாக மாறிய அரசு துவக்க பள்ளி

Added : டிச 30, 2020
Share
Advertisement
கொட்டையூர் : கொட்டையூர் ஊராட்சியில், அரசு துவக்கப் பள்ளி நெற்களமாக மாறியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொட்டையூர் ஊராட்சி. இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்இங்கு விளையும் நெல்லை காய வைக்க நெற்களம் இல்லாததால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால்,

கொட்டையூர் : கொட்டையூர் ஊராட்சியில், அரசு துவக்கப் பள்ளி நெற்களமாக மாறியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொட்டையூர் ஊராட்சி. இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்இங்கு விளையும் நெல்லை காய வைக்க நெற்களம் இல்லாததால், விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், சாலைகளிலும், துவக்கப் பள்ளி வளாகத்திலும், நெல்லை உலர வைக்கின்றனர்.இதனால், சாலையில் வாகனங்களில் செல்வோர், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி வளாகமும், நெற்களமாக மாறி வருவது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஒன்றிய நிர்வாகத்தினர், நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஒன்றிய அலுவலருக்கு, நெற்களம் கேட்டு மனு அளித்துள்ளோம். நெற்களம் அமைக்க போதுமான நிதி மற்றும் உத்தரவு வந்தவுடன், நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X