இடியும் நிலையில் ரேஷன் கடை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடியும் நிலையில் ரேஷன் கடை

Added : டிச 30, 2020
Share
திருவள்ளூர் : நியாய விலைக் கடை கட்டடத்தின், சிமென்ட் காரை பெயர்ந்து, இடியும் நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். பூண்டி ஒன்றியம், பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது, கண்ணன் காரணி கிராம். இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் வசதிக்காக, நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. கட்டடத்தின் சிமென்ட் காரை பெயர்ந்து, இரும்பு கம்பி வெளியில் தெரிகின்றன.

திருவள்ளூர் : நியாய விலைக் கடை கட்டடத்தின், சிமென்ட் காரை பெயர்ந்து, இடியும் நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

பூண்டி ஒன்றியம், பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது, கண்ணன் காரணி கிராம். இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் வசதிக்காக, நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. கட்டடத்தின் சிமென்ட் காரை பெயர்ந்து, இரும்பு கம்பி வெளியில் தெரிகின்றன. ஜன்னல், கம்பிகளும் சேதமடைந்து இருப்பதால், எலிகள், உள்ளே நுழைந்து, அரிசி, பருப்பு மூட்டைகளை சேதப்படுத்தி வருகின்றன.சேதமான அரிசி, பருப்புகளில், இடிந்து விழுந்த சிமென்ட் காரை துகள்கள் கலந்து விடுகின்றன.

இதனால், அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும், சேதமான கட்டடம் எப்பொழுது வேண்டுமானாலும், இடியும் அபாயம் இருப்பதால், விற்பனையாளரும், வாடிக்கையாளரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X