வாலிபர் மாயம்மப்பேடு: உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் மணிகண்டன், 25. ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்ட தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்ததால், தொழிற்சாலை நிர்வாகம் அவரை புனேவில் உள்ள கம்பெனிக்கு பணி இடமாற்றம் செய்தது.இதை கண்டித்து, சில தினங்களாக, 50 தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கம்பெனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை முனுசாமி அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண் பலி மணவாள நகர்: கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன், 39. திருமணமாகி, 15 ஆண்டுகள் ஆகிய இவருக்கு கவுசல்யா, 37 என்ற மனைவியும், 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர்.இந்நிலையில், கடந்த, 27ம் தேதி இரவு, கவுசல்யா கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், ஆட்டோவில் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து, அன்பழகன் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE