ஆர்.கே.பேட்டை : அடுத்தடுத்து வெளுத்து வாங்கிய புயல் மழையிலும், நிரம்பாத ஏரிகளால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மலையில் இருந்து ஊற்று நீர், சாலையில் பாய்ந்து வருவது வீணாகி வருகிறது.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் மற்றும் அம்மனேரி கிராமங்களுக்கு இடையில், ஏரி உள்ளது.அம்மனேரி மற்றும் மடுகூருக்கு இடையில், மலை உள்ளது. மலையில் இருந்து, தற்போது ஊற்று நீர் சுரந்து வருகிறது.இந்த ஊற்று நீர், முறையான வாய்க்கால் இல்லாததால், மலையடிவாரத்தில் சாலையில் தேங்கி நிற்கிறது.
மலையின் கிழக்கு பகுதியில் உள்ள ஏரி, அடுத்தடுத்து பெய்த புயல் மழைக்கும், முழு கொள்ளளவை எட்டவில்லை.மலையில் இருந்து சுரக்கும் ஊற்று நீரை, முறையாக கால்வாய் மூலம் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE