சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் மேல் செல்லும் மின்வடத்தால் பக்தர்கள் அச்சம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருவள்ளூர் : விநாயகர் கோவில் மற்றும் பெருமாள் கோவில் மேல் செல்லும் மின் வடங்களால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்டது, என்.ஜி.ஓ., காலனி. இங்கு, சந்தான விநாயகர் கோவில் மற்றும் கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இக்கோவிலுக்கு, பூங்கா நகர், ராஜாஜிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து,

திருவள்ளூர் : விநாயகர் கோவில் மற்றும் பெருமாள் கோவில் மேல் செல்லும் மின் வடங்களால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்டது, என்.ஜி.ஓ., காலனி. இங்கு, சந்தான விநாயகர் கோவில் மற்றும் கல்யாண சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இக்கோவிலுக்கு, பூங்கா நகர், ராஜாஜிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கின்றனர்.இந்த கோவிலின் குறுக்கே, பெருமாள் மற்றும் விநாயகர் சன்னிதிக்கு உயரே, மின்வடம் செல்கிறது. பத்துக்கும் மேற்பட்ட மின்வடம் இவ்வழியாக செல்வதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், அச்சத்துடனே, வழிபட்டு செல்கின்றனர்.

எனவே, கோவில் மேல் செல்லும், மின்வடத்தினை மாற்றி, சாலையோரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் மின் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X