பொது செய்தி

இந்தியா

'ஏர்ஆசியா இந்தியா'வை கையகப்படுத்தும் 'டாடா'

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: 'டாடா சன்ஸ்' நிறுவனம், விரைவில்,'ஏர்ஆசியா இந்தியா' நிறுவனத்தின், 83.67 சதவீத பங்குளை கையகப்படுத்த திட்டமிடுகிறது.டாடா நிறுவனம், மலேசியாவின், 'ஏர்ஆசியா' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏர்ஆசியா இந்தியா' எனும் கூட்டு வணிகத்தை துவங்கியது.'ஏர்ஆசியா இந்தியா'வின், 51 சதவீத பங்குகள், தற்போது, டாடா சன்ஸ் நிறுவனத்தின் வசம் உள்ளன. மீதி, 'ஏர்ஆசியா' நிறுவனத்தின் வசம்
TATA, HikeStake, AirAsia, India, ஏர் ஆசியா, டாடா, பங்குகள்

மும்பை: 'டாடா சன்ஸ்' நிறுவனம், விரைவில்,'ஏர்ஆசியா இந்தியா' நிறுவனத்தின், 83.67 சதவீத பங்குளை கையகப்படுத்த திட்டமிடுகிறது.

டாடா நிறுவனம், மலேசியாவின், 'ஏர்ஆசியா' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏர்ஆசியா இந்தியா' எனும் கூட்டு வணிகத்தை துவங்கியது.'ஏர்ஆசியா இந்தியா'வின், 51 சதவீத பங்குகள், தற்போது, டாடா சன்ஸ் நிறுவனத்தின் வசம் உள்ளன. மீதி, 'ஏர்ஆசியா' நிறுவனத்தின் வசம் உள்ளது. தற்போது, தன்னுடைய பங்கை, 83.67 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க, டாடா சன்ஸ் திட்டமிட்டு உள்ளது.


latest tamil news


மலேசிய நிறுவனம், ஏற்கனவே, இந்தியாவில் அதன் வணிகத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தில் உள்ளது. டாடா சன்ஸ், 'ஏர் இந்தியா'வை ஏலத்தில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறது. இவை இரண்டு காரணங்களால், 'ஏர்ஆசியா இந்தியா'வை கையகப்படுத்த, டாடா திட்டமிடுகிறது. இந்நிறுவனத்தை கையகப்படுத்தியதும், ரீ - பிராண்டு முயற்சியில் டாடா இறங்கும் எனத் தெரிகிறது.

ஏர் இந்தியாவை வாங்குவதில், டாடாவின் இன்னுமொரு கூட்டு தொழிலான, 'விஸ்டாரா'வின் கூட்டாளியான, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், இன்னும் முடிவு எதையும் அறிவிக்கவில்லை. டாடா குழுமம், கடந்த 14ம் தேதி, 'ஏர் இந்தியா'வை வாங்க விருப்பம் இருப்பதாக, அரசுக்கு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-டிச-202018:12:17 IST Report Abuse
J.V. Iyer சீக்கிரம் நடக்கட்டும். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
30-டிச-202017:54:59 IST Report Abuse
venkatan வான் வெளி ப் போக்கு வரத்து,கட்டணங்களை அதிகரித்தும் நட்டத்தில் இயங்கி வருகின்றன..அதுவும் அரசு நிறுவனமாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.பைலட், மற்ற,ஊழியர்களின் எகிறும் சம்பளம்,விமான எரிபொருள்,நிலைய கட்டணம் பராமரிப்பு போன்றவற்றில் வெளிநாடுகளுக்கு ஒப்ப செலவு இனங்களால் தாக்குப் பிடிக்க முடியாது..உள்ளூர் இயக்கம் வெளிநாட்டு இயக்கம்,வானூர்தி வகை போன்ற காரணிகளிக்கொண்டு வரவும் செலவும் தீர்மானிக்க வேண்டும்.எப்படியோ..பயணியர்க்கும்,இயக்குபவர்களுக்கும் கட்டுபடியாகக்கூடிய வர்த்தக மேலாண்மை அவசியம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-202016:33:11 IST Report Abuse
தமிழவேல் நல்ல செய்தி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X