பொது செய்தி

இந்தியா

எத்தகைய நெருக்கடியையும் தாங்கும் இந்தியா: ஐ.நா.,

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய பொருளாதாரம், நீண்ட காலத்தில், எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் அன்னிய நேரடி முதலீட்டு போக்குகள் மற்றும் கண்ணோட்டம் குறித்த,'யுனெஸ்காப்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியில், நீண்ட
UN, India, IndianEconomy, இந்தியா, இந்திய பொருளாதாரம், ஐநா

புதுடில்லி: இந்திய பொருளாதாரம், நீண்ட காலத்தில், எத்தகைய நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் அன்னிய நேரடி முதலீட்டு போக்குகள் மற்றும் கண்ணோட்டம் குறித்த,'யுனெஸ்காப்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியில், நீண்ட காலத்தில், எத்தகைய பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக, இந்திய பொருளாதாரம் இருக்கும்.


latest tamil news


இந்த பகுதியில், அன்னிய நேரடி முதலீட்டில், கிட்டத்தட்ட, 77 சதவீதம், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில், 2025ம் ஆண்டு வாக்கில், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சேவைகள், மின்னணு உற்பத்தி போன்ற முக்கிய டிஜிட்டல் துறைகள், இரு மடங்கு வளர்ச்சியைக் காணும். கொரோனா தொற்று காரணமாக, விவசாயத் துறை உள்ளிட்டவற்றில், டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.கடந்த, 2019ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து குறிப்பிடத்தக்க முதலீட்டு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
30-டிச-202021:02:19 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நீதான் ஜின்பிங்க்கு ஜிங்குசா அடிக்கிற அமைப்பாச்சே இப்ப என்ன புதுசா, எதும் உள்குத்து இருக்குதோ, இல்ல ஐநாவுக்கு வல்லரசு நாடுகளே நிலுவைத்தொகை கட்ட மறுக்கையில் நம்ம இந்தியா பைசா பாக்கியில்லாம செட்டில் செய்ததால் இந்த ஸ்டேட்மெண்டா?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-202020:43:48 IST Report Abuse
தமிழவேல் இதுதான் உச்சம் " கொரோனா தொற்று காரணமாக, விவசாயத் துறை உள்ளிட்டவற்றில், டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது."
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-டிச-202018:14:21 IST Report Abuse
Anand காங்கிரெஸை தாங்கி தாங்கி பழகிவிட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X