ஈரோடு: வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த, 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணிக்கின்றனர். இங்கிலாந்தில் இருந்து, உருமாற்றமடைந்த புதிய கொரோனா பரவலை தடுக்க, பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. தவிர, வெளிநாடுகளில் இருந்து கடந்த, 15க்குப்பின் வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி, 22 பேரில், 19 பேர் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு கொரோனா இல்லை என, உறுதியானது. மற்றவர்கள் வெளி மாவட்டம் சென்றுவிட்டனர். இதற்கிடையில், மேலும், 28 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து, ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியபட்டியலின்படி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் இருந்து, ஈரோடு வந்தவர் விபரம் சேகரித்துள்ளோம். ஏற்கனவே வந்த, 19 பேருக்கு கொரோனா இல்லை என, உறுதியானது. தற்போது, வெளிநாடுகளில் இந்து வந்த, 28 பேர் கொண்ட பட்டியலை, மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கி உள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தி உள்ளோம். இவர்களுக்கும், கொரோனா பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என, தெரியவந்துள்ளது. இருப்பினும் அடுத்த, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE