அந்தியூர்: ''மாசு இல்லாத வகையில், போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்,'' என, அமைச்சர் கருப்பணன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, பெருமுகை கிராம ஊராட்சியில், அம்மா மினி கிளினிக்கை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., ராஜா தலைமை வகித்தார். மகப்பேறு பெண்களுக்கு, அரசின் சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை, அமைச்சர் கருப்பணன் வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை, தொடங்க உள்ள நிலையில், அதில் இடம் பெறும் கட்சிகள் குறித்து, முதல்வர் பழனிசாமி அறிவிப்பார். தீபாவளி பண்டிகை போன்று, பொங்கல் பண்டிகையான போகியை, மாசு இல்லாத வகையில் மக்கள் கொண்டாட வேண்டும். போகி பண்டிகையின் போது ஏற்படும், காற்று மாசின் அளவை கண்காணிப்பதற்காக, சென்னையில் நடமாடும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE