பவானி: திருப்பூர் எம்.பி., சுப்பராயன், நேற்று பவானியில் உள்ள மயானம், அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கே மருத்துவ அலுவலர்கள், லோக்சபா தொகுதி நிதியில் இருந்து, உயர் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என, எம்.பி.,யிடம் மனு அளித்தனர். இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். மேலும், பவானி தினசரி காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டார். பின்னர், ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தில், பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE