சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்ப கட்டுப்பாடு செய்தும் கர்ப்பம்: அரசு மருத்துவமனை முற்றுகை

Added : டிச 30, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண், மீண்டும் ஐந்து மாத கர்ப்பிணியானதால், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 30, பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் மனைவி வைஜெயந்தி, 26, இவர்களுக்கு நபிஷா, 7. தக்சிகா, 4, என,

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண், மீண்டும் ஐந்து மாத கர்ப்பிணியானதால், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 30, பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் மனைவி வைஜெயந்தி, 26, இவர்களுக்கு நபிஷா, 7. தக்சிகா, 4, என, இரு மகள்கள் உள்ளனர். வைஜெயந்திக்கு கடந்த பிப்.,ல், சத்தியமங்கலம் அருகே, உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் வைஜெயந்திக்கு வயிறு சற்று உப்பலாக இருந்ததால், உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று, மருத்துவரிடம் காட்டியபோது, மாத்திரை வழங்கி அனுப்பியுள்ளனர். சந்தேகமடைந்த மகேந்திரன், வைஜெயந்தியை சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் சென்று பரிசோதித்தனர். அதில், அவர் ஐந்து மாத கர்ப்பிணியானது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று மதியம் மகேந்திரன், வைஜெயந்தி குடும்பத்தினர், கர்ப்பிணி பெண் என, உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழுடன், உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, வைஜெயந்தி கூறுகையில், ''குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 10 மாதங்களான நிலையில், வயிறு பெரியதாக இருந்ததால், தனியார் ஸ்கேன் சென்டரில் பரிசோதித்த போது, ஐந்து மாத கர்ப்பம் என்றனர். ஏழையாக இருப்பதால், இங்கு, சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என, சந்தேகமாக உள்ளது. மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X