சேலம்: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து, மருத்துவர்கள், மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு, ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியதாவது: தொற்று தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, முற்றிலும் தடுக்க, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு, மருத்துவர், மருத்துவ பணியாளர், சுகாதார பணியாளர் இணைந்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், கண்காணிப்பு, விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அத்துடன், அங்கு பணிபுரிவோர், மகளிர், கல்லூரி விடுதிகளில் தங்குவோர், உழவர், தினசரி சந்தைகளில் உள்ள வியாபாரிகள், 15 நாளுக்கு ஒருமுறை சளி பரிசோதனை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE