தமிழ்நாடு

பாதிக்கப்பட்டோருக்கு 8 மாதத்தில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கல்: போலீசில் 2013ல் பணியில் இணைந்தோர் அசத்தல்

Added : டிச 30, 2020
Share
Advertisement
சேலம்: போலீசில், 2013ல் பணியில் இணைந்தோர், தங்களுடன் பணியில் இணைந்தவர்களுக்கு, விபத்து உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, எட்டு மாதங்களில், 1.07 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர்.தமிழக போலீசில், 2013ல், 5,000 ஆண்கள், 3,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், தங்கள் பயிற்சி காலத்தில், வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் குழுக்களை ஏற்படுத்தினர். அதில் உள்ளவர்களில், யாரேனும் இறக்கும்

சேலம்: போலீசில், 2013ல் பணியில் இணைந்தோர், தங்களுடன் பணியில் இணைந்தவர்களுக்கு, விபத்து உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டோருக்கு, எட்டு மாதங்களில், 1.07 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர்.


தமிழக போலீசில், 2013ல், 5,000 ஆண்கள், 3,000 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், தங்கள் பயிற்சி காலத்தில், வாட்ஸ்ஆப், பேஸ்புக் மூலம் குழுக்களை ஏற்படுத்தினர். அதில் உள்ளவர்களில், யாரேனும் இறக்கும் நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் சிக்கி ஊனமடைந்தாலோ, நோயின் பிடியில் சிக்கி மருத்துவ செலவுக்கு பணமின்றி சிரமப்பட்டாலோ, அதுகுறித்த தகவலை, சமூக வலைதளங்களில் பரப்பி, நிதி திரட்டி உதவி வருகின்றனர். அதன்படி, கடந்த எட்டு மாதங்களில், 13 பேருக்கு, ஒரு கோடியே, ஏழு லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர். குறிப்பாக, கடந்த ஜனவரியில், விருதுநகர் மாவட்ட போலீஸ் பாஸ்கரன் குடும்பத்துக்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போலீஸ் பாஸ்கரன் குடும்பத்துக்கு, 14 லட்சம் ரூபாய்; தர்மபுரி வெங்கட்ராமனுக்கு, 12.60 லட்சம் ரூபாய்; திருவள்ளூர் ராம்ஜிக்கு, 7.14 லட்சம்; மதுரை நாகராஜனுக்கு, 16.27 லட்சம் ரூபாய்; திருவண்ணமலை அண்ணாதுரைக்கு, 13 லட்சம் ரூபாய்; விருதுநகர் மாவட்ட வாசு குடும்பத்துக்கு, 5.41 லட்சம் ரூபாய் வழங்கினர். அதேபோல், விபத்தில் காயமடைந்த, மதுரை மாவட்டம், சரவணனின் மருத்துவ செலவுக்கு, 2.77 லட்சம் ரூபாய்; திருவாரூர் சுரேஷ்குமாருக்கு, 2.53 லட்சம் ரூபாய்; விருதுநகர் வினோத்துக்கு, 1.91 லட்சம் ரூபாய்; தர்மபுரி செந்திலுக்கு, 12 லட்சம் ரூபாய்; தஞ்சாவூர் மோசஸ் மோகன்ராஜூக்கு, 8.15 லட்சம் ரூபாய்; தூத்துக்குடி சத்யலட்சுமிக்கு, 8.15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து, 2013 குழு போலீசார் கூறியதாவது: தமிழகத்தில், 2013ல் போலீசில் இணைந்தோர், வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், தனி குழுவாக செயல்படுகிறோம். அதில், ஒருவர் இறந்தாலோ, விபத்தில் சிக்கி காயம் அடைந்தாலோ, நோயின் பிடியில் சிக்கி தவித்தாலோ, சக போலீசார், அதன் விபரங்களை குழுவில் பதிவிடுகின்றனர். அதில், மாவட்டத்தில் உள்ள ஒருவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி, சேகரித்து, பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும். இதன்மூலம், தான் இல்லையென்றாலும், தன் குடும்பத்தை காப்பாற்ற சக போலீசார் உள்ளனர் என்ற நிலையை, போலீசாரிடம் ஏற்படுத்தி உள்ளோம். இதை பார்த்து, எங்களுக்கு பின், முன், போலீசில் இணைந்தவர்களும், குழுக்களை ஏற்படுத்தி, சக போலீசாருக்கு உதவ முன்வந்துள்ளனர். இது, எங்களுக்கு மன நிறைவை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், இச்சேவையை பார்த்து, உயரதிகாரிகள் பாராட்டுவது பெருமை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X