சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கம்பி உரசி தீப்பிடித்த லாரி; 9 மணி நேரத்துக்கு பின் அணைப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
இடைப்பாடி: மின்கம்பி உரசி, லாரியில் ஏற்பட்ட தீ, ஒன்பது மணி நேரத்துக்கு பின் அணைக்கப்பட்டது.மும்பையில் இருந்து, பெயின்ட் டப்பா அடங்கிய பொருட்களை ஏற்றிக்கொண்டு, டாரஸ் லாரியை, அதன் உரிமையாளரான, திருச்சியை சேர்ந்த அய்யாவு, 35, கோவை நோக்கி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:50 மணிக்கு, சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் வந்து கொண்டிருக்கும்போது, லாரி

இடைப்பாடி: மின்கம்பி உரசி, லாரியில் ஏற்பட்ட தீ, ஒன்பது மணி நேரத்துக்கு பின் அணைக்கப்பட்டது.


மும்பையில் இருந்து, பெயின்ட் டப்பா அடங்கிய பொருட்களை ஏற்றிக்கொண்டு, டாரஸ் லாரியை, அதன் உரிமையாளரான, திருச்சியை சேர்ந்த அய்யாவு, 35, கோவை நோக்கி ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:50 மணிக்கு, சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் வந்து கொண்டிருக்கும்போது, லாரி மேற்புறம், மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது. பெயின்ட் பொருட்கள் தீ பிடித்ததை பார்த்த அய்யாவு, வளைவில் திருப்ப முயன்றபோது கவிழ்ந்ததால், லாரி முழுதும் தீ பரவியது. அய்யாவு தப்பி ஓடிவிட்டார். மக்கள் தகவல்படி, கொங்கணாபுரம் போலீசார், ஓமலூர் - சங்ககிரி பிரதான சாலையில் வந்த வாகனங்களை, வேறு பாதையில் திருப்பிவிட்டனர். இடைப்பாடி, சங்ககிரி தீயணைப்பு வீரர்கள், மூன்று வாகனங்கள் மூலம், 8 மணி நேரம் போராடி, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். முடியாததால், மேட்டூரில் இருந்து, கெமிக்கல் தீயை அணைக்கும் வாகனம் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில், தீ அணைக்கப்பட்டது. இதனிடையே, அருகில் இருந்த புளியமரத்துக்கு தீ பரவி, உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், தீயை அணைத்த பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மரத்தை, மதியம், 3:00 மணிக்கு அகற்றினர். இச்சம்பவத்தால், 17 மணி நேரத்துக்கு பின், ஓமலூர் - சங்ககிரி பிரதான சாலையில், வாகனங்கள் இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X