பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டாறு தடுப்பணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

Added : டிச 30, 2020
Share
Advertisement
அரூர்: வரட்டாறு தடுப்பணையில் இருந்து, ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை,

அரூர்: வரட்டாறு தடுப்பணையில் இருந்து, ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், தொடர்மழையால், கடந்த, 7ல், தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.45 அடி நிரம்பி, உபரி நீர் வரட்டாற்றில் பழைய ஆயக்கட்டு வழியாக செல்கிறது. வரட்டாறு தடுப்பணையில் இருந்து, தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு பின், தடுப்பணை நிரம்பியுள்ளது. இதிலிருந்து, தண்ணீர் திறக்கப்பட்டால், வலது மற்றும் இடதுகால்வாய் மூலம், எல்லப்புடையாம்பட்டி மொல்லன் ஏரி, அல்லிக்குட்டை, மாம்பாடி, வேப்பம்பட்டி, கீரைப்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி மற்றும் ஒடசல்பட்டி ஏரிகள் நிரம்பும். தற்போது, ஈரப்பதம் உள்ளதால், தண்ணீர் வீணாகாமல் ஏரிகளுக்கு செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X