பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

Added : டிச 30, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தையில், காய்கறிகளின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தர்மபுரி உழவர் சந்தையில், காய்கறி, பழம், கீரைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சந்தையில், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு கிலோ, 12 ரூபாய் என விற்ற தக்காளி, நேற்று, 18 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல்,

தர்மபுரி: தர்மபுரி உழவர் சந்தையில், காய்கறிகளின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தர்மபுரி உழவர் சந்தையில், காய்கறி, பழம், கீரைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது சந்தையில், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு கிலோ, 12 ரூபாய் என விற்ற தக்காளி, நேற்று, 18 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், வெண்டை கிலோ, 18ல் இருந்து, 22 ரூபாய், அவரை, 28ல் இருந்து, 34 ரூபாய், முருங்கைக்காய், 40ல் இருந்து, 80 ரூபாய், மிளகாய், 12ல் இருந்து, 18 ரூபாய் என, பல்வேறு காய்கறிகளின் விலை, கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் என, அடுத்தடுத்து வரும் முக்கிய நாட்களால், காய்கறிகளின் விலை, மேலும் உயர வாய்ப்புள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X