பொது செய்தி

தமிழ்நாடு

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அனைத்து யூனியன் அலுவலகங்களில் இருந்து, விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்தனர்.கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: கிருஷ்ணகிரி அணையின் இடது, வலதுபுற வாய்க்கால் நீட்டிப்பு செய்து, காரிமங்கலம் அருகே தும்பலஹள்ளி அணைக்கு, தண்ணீர் கொண்டு

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அனைத்து யூனியன் அலுவலகங்களில் இருந்து, விவசாயிகள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவித்தனர்.


கூட்டத்தில், கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: கிருஷ்ணகிரி அணையின் இடது, வலதுபுற வாய்க்கால் நீட்டிப்பு செய்து, காரிமங்கலம் அருகே தும்பலஹள்ளி அணைக்கு, தண்ணீர் கொண்டு வரும், எண்ணேகொல்புதூர் - தும்பலஅள்ளி நீர் பாசன திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு, 72 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த, தர்மபுரி மாவட்டத்தில், விவசாயிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த, ஒருவர் கூட ஒப்புதல் அளிக்கவில்லை. இது குறித்து, அவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக திட்டத்தின் பயன்கள் குறித்து, விளக்கப்பட்டு வருகிறது. இதுவரை, யாரும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. அதனால், நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த, கட்டாய நிலஎடுப்பு அரசாணையை, தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. தற்போது, 50 சதவீதம் பேர், திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X