அதியமான்கோட்டை: கோட்டைகரையில், சேதமான குடிநீர் குழாயால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடி வருகிறது. நல்லம்பள்ளி யூனியன், அதியமான்கோட்டை பஞ்.,க்கு உட்பட்டது கோட்டைகரை. இங்கு, பஞ்., நிர்வாகம் சார்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இங்கிருந்து அருகே உள்ள பகுதிகளுக்கு, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிலர், இந்த குடிநீர் குழாயை சேதப்படுத்தினர். இதனால், தண்ணீர் கொண்டு செல்லும்போது, குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதனால், நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக, இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், அதியமான்கோட்டை பஞ்., நிர்வாகம், சேதமான குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும். குடிநீர் குழாய் மீண்டும் சேதப்படுத்தப் பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது, பஞ்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE