சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெடிக்கல் கடையை காலி செய்ய மறுத்தவரை தாக்கிய 2 பேர் கைது

Added : டிச 30, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கடையை காலி செய்ய மறுத்தவரை தாக்கியதாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கதிரிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன், 41; இவர், வேப்பனஹள்ளியில், ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், கட்டட உரிமையாளர் ஸ்ரீகாந்த், 27, அவரது தம்பி வெங்கடேஷ், 25, ஆகியோர், நாராயணனிடம், மெடிக்கல்

கிருஷ்ணகிரி: கடையை காலி செய்ய மறுத்தவரை தாக்கியதாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கதிரிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணன், 41; இவர், வேப்பனஹள்ளியில், ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், கட்டட உரிமையாளர் ஸ்ரீகாந்த், 27, அவரது தம்பி வெங்கடேஷ், 25, ஆகியோர், நாராயணனிடம், மெடிக்கல் கடையை உடனடியாக காலி செய்ய கூறியுள்ளனர். அப்போது நாராயணன், மெடிக்கல் கடை வைக்கும் போதே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் வரும், 2021 மே மாதம் இறுதி வரை, கால அவகாசம் உள்ளது. எனவே, தற்போது என்னால் காலி செய்ய முடியாது, என கூறியுள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரது தம்பி வெங்கடேஷ் இருவரும், நாராயணனை கடுமையாக அடித்து, உதைத்துள்ளனர். இது குறித்து நாராயணன் புகாரின்படி, வேப்பனஹள்ளி போலீஸ் எஸ்.ஐ., சந்துரு வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீகாந்த் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X